15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?



நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்கப் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல ஒரு கிழமைக்குரிய தேதியை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் கட்டளையிடுகிறது, வலியுறுத்துகிறது, ஆர்வமூட்டுகிறது. அன்றி தடை விதிக்கவில்லை என்பதையும் தெளிவாக நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

இன்று அதிகமான மக்கள் நம்பியுள்ளது போல பிறை மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அதைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்பது தவறான வழிமுறையாகும் என்பதை இதுவரை படித்த விளக்கங்களிலேயே நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.

இருப்பினும் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று வாதிடும் சிலர், பலவீனமான அறிவிப்புகளை சிறிதும் ஆய்வு செய்திடாமல் தங்களின் பிறை கொள்கைக்கு தக்க ஆதாரங்களாக நம்பி அவற்றை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு அவ்வறிஞர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுமே மிகவும் பலவீனமாகத்தான் உள்ளன என்ற நிலையில், அத்தகைய அறிவிப்புகளில் சிலவற்றை சுருக்கமான தகவல்களுடன் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.


தொடர்புடைய பதிவுகள் :-