سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : 1938
حدثنا محمد بن إسماعيل الفارسي , ثنا عثمان بن خرزاذ , ثنا إبراهيم بن بشار , ثنا سفيان بن عيينة , عن منصور , عن ربعي بن حراش , عن أبي مسعود الأنصاري , قال : أصبحنا صبيحة ثلاثين , فجاء أعرابيان رجلان يشهدان عند النبي صلى الله عليه وسلم أنهما أهلاه بالأمس , فأمر الناس " فأفطروا " *
முப்பதாவது காலையை நாம் அடைந்தோம். அப்போது இரு மனிதர்களான கிராமவாசிகள் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் நேற்று அதற்காக இருவர் சப்தமிட்டதாக சாட்சி கூறினர். அச்சமயம் அவர் மக்களுக்கு கட்டளையிட்டார். எனவே நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள்.
அறிவித்தவர் : அபீ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி). நூல்: தாரகுத்னீ 1938.
மேற்கண்ட இந்த அறிவிப்புதான் மாற்றுக் கருத்துடையோர் எடுத்துக்காட்டும் செய்தியாகும். இதிலும் அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எந்த ஆதாரமும் காண முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க இந்த அறிவிப்பின் பலவீனமான இலட்சனங்களைப் பாருங்கள்.
இதில் அபீ மஸ்வூத் அல் அன்சாரி என்ற நபித்தோழரிடமிருந்து ரிப்யீ பின் ஹிராஷ் கேட்டதாக அறிவிப்பாளர் தொடர் அறுபடாமல் உள்ளது என்பதே அவர்களின் வாதம். இவ்வாறு வாதம் புரிபவர்களுக்கு ஹதீஸ்கலையை உண்மையிலேயே தெளிவாக படித்திருந்தால் அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டியிருக்க மாட்டார்கள்.
ஏனெனில் இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சுப்யான் பின் உவைனா என்பவரின் இறுதி காலத்தில் 'மனன சக்தியை இழந்துவிட்டார்' என்றும் 'அவர் செய்திகளை மறைத்து அறிவிப்பார்' என்பதும் அறிஞர்களின் விமர்சனங்களாகும். அதாவது 'இல்லாததை இருப்பது போலும், இருப்பதை இல்லாதது போலும் ஹதீஸிலும், அறிவிப்பாளர் வரிசையிலும் இணைத்துவிடுவார்' என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேற்படி சுப்யான் பின் உவைனாவைப் பற்றி விமர்சித்து உள்ளார்கள்.
மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளரான இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி என்ற அறிப்பாளரும் பலவீனமானவரே. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தஹபி (ரஹ்) போன்றவர்கள் இவரைப் பற்றி கூறும்போது, மேற்படி இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதியாகிய 'இவர் கற்பனை செய்து கூறுவதும்', 'இல்லாததை இணைப்பதும்' இவரின் பணியாகும் என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி பற்றி இமாம் நஸாயி (ரஹ்) கூறும்போது 'இவர் பலமற்றவர்' என்றும், 'இவர் கற்பனை செய்து கூறுபவர்' என்று இமாம் புஹாரி (ரஹ்) அவர்களும் கூறுகின்றார்கள்.
அபூ அகமது பின் ஆதி அவர்கள் இவரைப் பற்றி கூறும்போது 'இப்னு உவைனாவிடமிருந்து இவர் அறிவிப்பது முர்ஸலாகவே உள்ளன' என்கின்றார்கள்.
இமாம் அஹமத் (ரஹ்) அவர்களின் மகனான அப்துல்லாஹ் அவர்கள் இமாம் அவர்களிடம் இவரைப் பற்றி விசாரித்தார். இமாம் அவர்கள் இப்ராஹிம் பின் பஷ்ஷார் அர்ரமாதி அவர்கள் 'சுப்யானிடமிருந்து அறிவிப்பதாக இவர் கூறினால் அது சுப்யான் பின் உவைனாவிடமிருந்து கேட்டதாக இல்லை'. அது வேறு சுப்யானாகும் என்றார்கள்.
இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இவரைப்பற்றி கூறும்போது 'லைஸ பி ஷை' என்று கூறுவார்கள். மேலும் 'அவர் சுப்யானிடமிருந்து எதையும் எழுதிக்கொள்ள வில்லை'. மேலும் 'அவருடைய கையில் எழுதுகோலை எப்பொழுதும் பார்த்ததேயில்லை'. 'மக்கள் எழுதும் போது சுப்யான் எதையெல்லாம் கூறவில்லையோ அவற்றையெல்லாம் எழுதி வைத்துவிடுவார்' என்று கூறியுள்ளார்கள்.
அல் அகீலி அவர்கள் இவரின் பல ஹதீஸ்கள் மீது 'லைஸ லஹூ அஸ்லுன் மின் ஹதீஸி இப்னு உவைனா' எனக் கூறுவார். அதாவது 'அவருக்கு அபூஉவைனாவின் ஹதீஸில்; எந்த ஒரு மூலமும் கிடையாது' என இப்னு அதி கூறும் கூற்றை பதிவு செய்வார்.
இவ்வாறு விண்னை முட்டும் விமர்ச்னங்கள் மேற்காணும் ரிவாயத்தில் இருக்க, மேற்படி சங்கதிகளை மூடி மறைத்து, அறிவிப்பாளர் தொடர்பு அறுபடாது வந்து விட்டது என்று திசை திருப்புவது ஏன்? புறக்கண் பார்வை நிலைப்பாட்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லாத மேற்படி செய்தியை ஆதாரமாகக் கருதும் மாற்றுக் கருத்துடையோரின் ஹதீஸ் ஆய்வின் மிகவும் பின்னடைந்த போக்கை கண்டு வியப்படைகிறோம்.
இவ்வாறு விண்னை முட்டும் விமர்ச்னங்கள் கொண்ட செய்திகளையே மாற்றுக் கருத்துடையோர் தங்களின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அத்தகைய பவீனமான ஆதாரங்கள் பிறைகள் விஷயத்தில் மக்களை வழிநடத்த அவர்கள் கொஞ்சம்கூட தகுதியற்றவர்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது. அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்காத ஒரு செய்தியை (தாரகுத்னீ 1938) அவர்கள் ஆதாரமாகக் கொண்டு வந்தனர். அந்த ஆதாரமும் தேறவில்லை. இந்நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே செயல்பட வேண்டும் என்ற அவர்களின் கூற்றை எவ்வாறு நிரூபிக்க போகின்றார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், அல்லாஹ்வின் உதவியால் இந்த பிறை விஷயங்கள் பற்றி முழுவீச்சில் நாம் ஆய்வுக் களத்தில் இறங்கிய பிறகுதான், மாற்றுக் கருத்துடையவர்கள் ஹதீஸ்களை இப்படி கூடவா வளைத்தும், திரித்தும் தங்களுடைய ஆதாரமாக வாதிடுவர்? என்பதை அறிந்து வியந்தோம். அவர்கள் ஹதீஸ்களை கையாளும் அவல நிலையையும் தெளிவாக அறிந்து கொண்டோம்.
தங்களின் சுயஅறிவிற்கு ஒத்துவராத செய்திகளை அது ஸஹீஹானதாக இருக்கும் நிலையில்கூட அவற்றைத் தட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் அவ்வதீஸ்களை துருவித் துருவி ஆய்வு செய்து பலவீனமாக்க முயலும் அவர்கள், பிறை விஷயத்தில் மட்டும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக்கூட ஆதாரமாகக் காண்பித்து மக்களை ஏமாற்றும் மோசடி போக்கைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சி அடைகிறோம். இப்புத்தகத்தை கவனமாக படித்து உள்வாங்கி வரும் நீங்கள்கூட இதே மனநிலைமையில் இருக்கலாம்.
ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்களின் கூற்று மார்க்க ஆதாரமாகாது என்று மேடைக்கு மேடை முழங்கும் பிரபல மௌலவி, சரியான அறிவிப்பாளர்கள் வரிசையைக் கொண்ட ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தமது சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்தைச் சொல்லி ழயீஃப் என்று அவர் சுலபமாக தட்டிவிடும் நிலையில், பிறை விஷயத்தில் மட்டும் இந்த முர்ஸலான அறிவிப்பு உட்பட பல பலவீனமான அறிவிப்புகளைக்கூட தமது பிறைநிலைப்பாட்டிற்கு தக்க ஆதாரங்களாகத் தூக்கிப்பிடிக்கும் இரகசியம்தான் என்ன? என்று கேட்கிறோம்.