حدثنا محمد بن إسماعيل قال : حدثنا إبراهيم بن المنذر قال : حدثنا إسحاق بن جعفر بن محمد قال : حدثني عبد الله بن جعفر ، عن عثمان بن محمد ، عن سعيد المقبري ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم قال : " " الصوم يوم تصومون ، والفطر يوم تفطرون ، والأضحى يوم تضحون " *.(سنن الترمذي الجامع الصحيح - أبواب الجمعة أبواب الصوم عن رسول الله صلى الله عليه وسلم - باب ما جاء في أن الفطر يوم تفطرون حديث : 665).
நோன்பு நீங்கள் நோன்பு நோற்கும் கிழமையாகும்;. பெருநாள் நீங்கள் நோன்பு பிடிக்காத கிழமையாகும்;;. ஹஜ்ஜுப் பெருநாள் நீங்கள் குர்பானி கொடுக்கும் கிழமையாகும்;;; ஆகும்;. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவித்தவர்: அபு ஹுரைராஹ் (ரழி), நூல்: திர்மிதீ,அபூதாவூத்).
மேற்கண்ட அறிவிப்பை வைத்து மாற்றுக் கருத்துடையோர், நோன்பு என்று ஒருநாளை நாம் அனைவரும் முடிவு செய்துவிட்டால் அது நோன்பு நாளாகிவிடும் என்றும் அதுபோல நாம் விரும்பியபடி அனைவரும் சேர்ந்து பெருநாள் என்று ஒருநாளை முடிவெடுத்து விட்டால் அது பெருநாள் தினமாகிவிடும் என்றும் கூறுகின்றனர். முதலில் நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியிருப்பார்களா? என்று சிந்தியுங்கள்.
நீங்கள் நோன்பு நோற்கும் நாளில்தான் நோன்பு என்றால் அதில் 'நீங்கள்' என்ற சொல் யாரையெல்லாம் குறிக்கும்? தனித்தனி நபர்களையா? அந்தந்த ஊர்களில் வாழும் முஸ்லிம்களையா? அல்லது சர்வதேச முஸ்லிம்கள் அனைவரையும் சேர்த்து குறிக்குமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும்.
சரி இந்த அறிவிப்பாவது ஸஹீஹானதுதானா என்றால் அதுவுமில்லை. இந்த அறிவிப்பில் இப்ராஹிம் பின் முன்திர் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப்பற்றி இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) மற்றும் ஜக்கரிய்யா (ரஹ்) மற்றும் இப்னு ஹஜர் (ரஹ்) போன்றோர் கூறும்போது 'இவர் வெறுக்கப்படக் கூடியவர்' மேலும் ஹல்கில் குர்ஆன் (குர்ஆன் படைக்கபட்டதா) என்ற விஷயத்தில் இவர் பேசப்பட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.
மேலும் இந்த அறிவிப்பில் உஸ்மான் பின் முஹம்மது என்பவரும் இடம் பெற்றுள்ளார். அவரை 'சந்தேகத்திற்குரியவர்', 'வெறுக்கப்படக் கூடியவர்' என்று இமாம் தஹபி (ரஹ்) மற்றும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படி படித்தவுடனேயே இது பலவீனம்தான் என்று தெளிவாக தெரியும் மேற்கண்ட அறிவிப்பா? புறக்கண்ணால் பிறந்த பிறையை பார்ப்பதற்கு ஆதாரம்? மேலும் மேற்கண்ட அறிவிப்பில் சில வார்த்தை மாற்றங்களுடன் வந்துள்ள அனைத்து செய்திகளும் பலவீனமானவைகளே.
மேலும், மேற்கண்ட அறிவிப்பில் உள்ள வாசகங்களை உற்று நோக்கும் போது, ஒரே நாளில் தான் அனைவரும் நோன்பிருக்க வேண்டும். அதே போல் ஒரே நாளில் தான் பெருநாளாகும் என்பதைத்தான் அந்த செய்தி தெளிவுபடுத்துகின்றது. எனவே மேற்கண்ட அறிவிப்புகள் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்திருக்குமானால் அது ஹிஜ்ரி கமிட்டியினருக்கு ஆதாரமான செய்தியாகவே அமைந்திருக்கும். மேலும் அவர்கள் கூறுவது போல் மக்கள் தீர்மானத்தின்படி மாதத்தை ஆரம்பித்தோ பெருநாளை முடிவுசெய்தோ கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை அந்த அறிவிப்பில் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதை அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். எனவே அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மேற்கண்ட இந்த அறிவிப்பும் ஆதாரமாக அமையவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.
மேற்கண்ட பலவீனமான அறிவிப்புகளையும், பல விமர்சங்களைக் கொண்ட அறிவிப்பாளர்களின் செய்திகளையும் முன்னிறுத்திதான் மாதத்தைத் தீர்மானிக்க 30-வது நாள் இரவில் மேற்குத் திசையில் பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் நிலைப்பாட்டிற்கு இவையே ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவதிலிருந்து, அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு எந்தவிதமான தரமான, ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பது தௌ;ளத் தெளிவாக நிரூபணம் ஆகிவிட்டது. இன்னும் பிறை பார்த்தல் சம்பந்தமாக மாற்றுக் கருத்துடையோர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் ஒன்று பலவீனமான செய்தியாக இருக்கும், அல்லது அவர்களின் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அவை அமையாது என்ற நிலையில்தான் உள்ளன.
மேலும் அவர்களுடைய புறக்கண்பார்வை அடிப்படையில், 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்வதுதான் நபிவழி என்று நம்பியுள்ளனர். முப்பதாம் இரவு என்ற அந்த நாளில் மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்றும் நம்பியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ற மாற்றுக் கருத்துடையோரின் இந்த நம்பிக்கைக்கும், நிலைப்பாட்டிற்கும் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் உள்ள ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூட ஆதாரமாக இல்லை. மாற்றுக் கருத்துடையவர்களால் தங்கள் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஒரு ஆதாரத்தைக்கூட இதுவரை காட்டிட முடியவில்லை என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.
மாற்றுக் கருத்துடையோரின் மேற்படி நம்பிக்கைக்கும், அவர்களின் பிறை நிலைப்பாட்டிற்கும் குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இல்லவே இல்லை என்பதை இவர்களை கண்ணியமாக அணுகி, குர்ஆன் சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை சமர்ப்பித்து, சுட்டிக்காட்டி, பல விளக்கங்களை அளித்தும் அவற்றை எல்லாம் கொஞ்சம்கூட ஏறிட்டு பார்க்காமல் 'பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்க வேண்டும், பிறை படித்தரங்களை கணக்கிடக்கூடாது' என்று இன்றும் அடம்பிடித்து வருவதை பார்க்கிறோம். இவ்வாறு அடம்பிடித்து, மார்க்கத்தின் பெயரில் மக்களையும் தவறான வழியின்பால் இட்டுச் செல்வோர் பிறைவிஷயத்தில் தங்கள் மனோ இச்சையைத்தான் மார்க்கமாக பின்பற்றுகின்றனர்.
தாங்கள் மக்களிடம் இதுநாள்வரை கூறிவந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது என்ற பரிதவிப்பில் சிலர் இருக்கலாம். அல்லது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்திலும்கூட இருக்கலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையிலுள்ள உலமா பெருமக்கள் தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க வேண்டுகிறோம். மக்களுக்கு நேரான வழியை போதிப்பதற்கு தயங்கிடவே கூடாது என்கிறோம். உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் ஆவர்.