பிறைகளை புறக்கண்களால் பார்ப்பது சம்பந்தமான ஆய்வறிக்கையில் சாட்சி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என்ற ஐயம் எழலாம். இருப்பினும் சாட்சி விஷயங்களிலும் புறக்கண்பார்வை உள்ளடங்கியுள்ளது என்றும், தங்கள் நிலைப்பாட்டிற்கு இதுவும் ஆதாரம் என்றும் மாற்றுக்கருத்தினர் கூறுகின்றனர். மேலும் இரண்டு சாட்சிகள் மூலம் பிறை பார்க்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நபி (ஸல்) செயல்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். எனவே இப்பிறைசாட்சி சம்பந்தமான செய்திகள் பற்றியும் விரிவாகக் காண்போம்.
இரு சாட்சிகள் (ஷாஹிதானி) குறித்த இத்தகைய பலவீனமான அறிவிப்புகள் அஹமத் (18510), நஸாயி (2395), தாரகுத்னீ (1920), மஹாரிபத்து ஸஹாபா (6626) போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.
29-பின்னேரம் 30-வது இரவில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதே மாற்றுக்கருத்தினரின் பிறை கொள்கை. இதற்கு ஆதாரங்கள் என்று கூறிவந்த பல செய்திகள் அவர்களுடைய பிறை நிலைப்பாட்டிற்கு எதிரானதாக ஆகிவிட்டன. மேலும் அவர்களின் ஆதாரங்கள் பெரும்பாலும் பலவீனமான, இட்டுக்கட்டபட்ட செய்திகளாகத்தான் இருப்பதை 'பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?' என்ற இந்த தலைப்பின்கீழ் தொடர்ந்து படித்து வருகிறோம்.
• பிறை பார்த்த சாட்சியை ஏற்றுக் கொள்ளலாமா?
• பிறை பார்த்ததற்கு ஒரு சாட்சி மட்டும் போதுமா? அல்லது
• பிறை பார்த்ததற்கு இரண்டு சாட்சிகள் அவசியம் தேவையா?
போன்ற சர்ச்சைகள் சமுதாயத்தில் நிலவிக் கொண்டே இருக்கின்றன. எனவே பிறை சாட்சி சம்பந்தப்பட்ட அத்தகைய செய்திகளையும் நாம் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். பிறைசாட்சி சம்பந்;தமாகக்கூட மாற்றுக் கருத்துடையோர் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை சமர்ப்பிக்க வில்லை. இவர்கள் ஆதாரமாக நம்பியுள்ள ஒரு சாட்சியைக் கொண்டு பிறைத் தகவலை செயல்படுத்தியதாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே உள்ளன. இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தகவல் பெற்று செயல்பட்டதாக வரும் செய்திகளும் 'முர்ஸலான', 'மவ்கூஃபான' செய்தியாகவே உள்ளன என்பதுதான் வேதனையிலும் வேதனை. இரு சாட்சிகள் (ஷாஹிதானி) குறித்த அறிவிப்புகளின் நிலையைப் பாரீர்.
حدثنا يحيى بن زكريا ، قال : أخبرنا حجاج ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه ،فقال : ألا إني قد جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم ، وسألتهم ، ألا وإنهم حدثوني ، أن رسول الله صلى الله عليه وسلم قال : " صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأنسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان مسلمان ، فصوموا وأفطروا" .
مسند أحمد بن حنبل - أول مسند الكوفيين حديث أصحاب رسول الله صلى الله عليه وسلم - حديث : 18510
அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையிலே அறுத்துப் பலியிடுங்கள். அது உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைப் படுத்துங்கள்). மேலும் இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அவர்களின் தோழர்கள் என்னிடம் அறிவித்தார்கள். அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ, நூல்: அஹ்மத் - 18510.
أخبرنا إبراهيم بن يعقوب ، قال : حدثنا سعيد بن شبيب أبو عثمان ، وكان شيخا صالحا بطرسوس ، قال : أخبرنا ابن أبي زائدة ، عن حسين بن الحارث الجدلي ، عن عبد الرحمن بن زيد بن الخطاب ، أنه خطب الناس في اليوم الذي يشك فيه فقال : ألا إني جالست أصحاب رسول الله صلى الله عليه وسلم وسألتهم ، وإنهم حدثوني أن رسول الله صلى الله عليه وسلم قال : " صوموا لرؤيته وأفطروا لرؤيته ، وانسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، وإن شهد شاهدان فصوموا وأفطروا " *. السنن الكبرى للنسائي - كتاب الصيام ذكر الاختلاف على سفيان في حديث سماك - حديث : 2395
அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் சந்தேகப்படக்கூடிய நாளில் மக்களுக்கு உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையிலே அறுத்துப் பலியிடுங்கள். அது உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைபடுத்துங்கள்). மேலும் இரண்டு சாட்சியாளர்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்'.
அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: நஸாயி - 2395.
حدثنا أبو بكر , ثنا أبو الأزهر , ثنا يزيد بن هارون , ثنا الحجاج , عن الحسين بن الحارث , قال : سمعت عبد الرحمن بن زيد بن الخطاب , يقول : إنا صحبنا أصحاب النبي صلى الله عليه وسلم وتعلمنا منهم وإنهم حدثونا أن رسول الله صلى الله عليه وسلم , قال : " صوموا لرؤيته وأفطروا لرؤيته , فإن أغمي عليكم فعدوا ثلاثين , فإن شهد ذوا عدل فصوموا وأفطروا وأنسكوا " *. سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : 1920
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் நாம் தோழமை கொன்டோம் மேலும் நாம் அவர்களிடமிருந்து கற்றோம். மேலும் நிச்சயமாக நாம்மிடம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது அது மங்கும் போது நீங்கள் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள். மேலும் நீதமானவர்களில் இருவர் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள் மேலும் நீங்கள் நோன்பை நிறைவு செய்யுங்கள் மேலும் நீங்கள் அறுத்து பலியிடுங்கள்''.
அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல்: தாரகுத்னீ - 1920
حدثنا أبو بكر بن مالك ، ثنا عبد الله بن أحمد بن حنبل ، حدثني أبي ، ثنا يحيى بن زكريا ، ثنا حجاج يعني ابن أرطأة ، عن حسين بن الحارث الجدلي ، قال : خطب عبد الرحمن بن زيد بن الخطاب في اليوم الذي يشك فيه من رمضان ، قال : ألا إني قد جالست أصحاب النبي صلى الله عليه وسلم وساءلتهم ، ألا وإنهم حدثوني أن النبي صلى الله عليه وسلم ، قال : " صوموا لرؤيته ، وأفطروا لرؤيته ، وأمسكوا لها ، فإن غم عليكم فأتموا ثلاثين ، فإن شهد شاهدان مسلمان فصوموا وأفطروا " *. معرفة الصحابة لأبي نعيم الأصبهاني - باب العين عبد الرحمن بن زيد بن الخطاب - حديث : 6626.
அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்கள் ரமழான் மாதத்தின் சந்தேகப்படக்கூடிய நாளில் உரை நிகழ்த்தியதாக ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ கூறுகின்றார்கள். 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது 'நிச்சயமாக நீங்கள் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பு வையுங்கள், மேலும் அதன் காட்சியின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்யுங்கள். மேலும் அதன் காட்சியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மறைக்கப்படும் போது நீங்கள் முப்பதை முழுமையாக்குங்கள் (முழுமைபடுத்துங்கள்). மேலும் இரண்டு முஸ்லிம்கள் சாட்சி கூறும் போது நீங்கள் நோன்பு வையுங்கள், நோன்பை நிறைவு செய்யுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அவர்களின் தோழர்கள் என்னிடம் அறிவித்தார்கள்.
அறிவித்தவர் : ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ நூல் : மஹாரிபத்து ஸஹாபா – 6626.
• மேற்கண்ட நான்கு அறிவிப்புகளையும் ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற தாபிஈயீதான் அறிவிக்கின்றார். மேற்படி தாபிஈ அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் என்ற மற்றொரு தாபிஈ இடமிருந்து அறிவிப்பதாகவே செய்தியில் உள்ளது. அந்தத் தாபிஈ கூட நபித்தோழர்களான ஸஹாபாக்களிடம் இருந்தே அவர் அறிந்ததாகக் கூறுகின்றார். இதை முதலாவதாக கவனத்தில் கொள்க.
• இச்செய்தியை அவருக்கு அறிவித்த நபித்தோழர் யார்? அந்த ஸஹாபியின் பெயர் என்ன? போன்ற விபரங்களை அவர் கூறவில்லை. இதை இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.
• ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்பவர் தாபிஈயீ என்று அறியப்பட்டாலும் அவருக்கு தெளிவான வரலாறுகள் இல்லை. அவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடமிருந்து மாணவர் என்ற ரீதியில் கேட்காமல், ஏதோ உரை நிகழ்த்தும் போது கேட்டதாகவே இச்செய்தி பதியப்பட்டுள்ளது. இது மூன்றாவது விஷயம்.
• மேலும் இச்செய்தியை வேறு எந்த ஸஹாபியும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக எந்த ஹதீஸூம் இல்லை. மேலும் இதுபோன்ற ஒரு செய்தியை இவர் அல்லாத மற்ற எந்த தாபிஈயும் அறிவிக்க வில்லை. மேற்கண்ட இச்செய்தி 'முர்ஸல்' என்னும் 'முன்கதீ' (தாபிஈயீன் தரத்தில் உள்ளவரின்) அறிவிப்பேயாகும்.
• நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் இரண்டு வயதுடைய குழந்தையாக இருந்தார்கள் என்ற செய்தி வரலாறுகளில் காணக் கிடைக்கிறது. அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபி அல்ல. மேலும் இவர்களுக்கு இரண்டு வயது இருக்கும்போதே நபி (ஸல்) அவர்கள் மரணித்தும் விட்டதால், இவர் ஸஹாபிகளிடம் இருந்தே ஹதீஸ்களை அறிவிப்பவராக இருந்தார்கள். இவரை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தார் என்று சொல்லலாமே அல்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்ட நபித்தோழர் என்று கூறவியலாது.(பார்க்க ஜாமிவுல் ஹதீஸ்).
• அதில் 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றேன். மேலும் நான் அவர்களிடமிருந்து கேட்டேன். நிச்சயமாக அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக' என்ற வாசகங்கள் அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் அவர்களின் சொற்பொழிவின் கருத்துக்களாகும்.
ஸஹீஹான ஹதீஸ்கள் கூட குர்ஆனுக்கு முரணாக இருப்பதாக தாங்கள் கருதினால் அவற்றை பின்பற்றக் கூடாது என வாதிடும் சிலர், தற்போது ஸஹாபாக்களின் கூற்றையும் விட அடுத்த நிலையில் உள்ள தாபிஈயீன்களின் கூற்றையும் ஏற்கத் தயாராகி விட்டது வியப்பில் ஆழ்த்துகிறது.
• மேற்படி நான்கு நூற்களில் வரும் அறிவிப்புகளையும் ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ என்ற ஒரே நபர்தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார். மேற்படி அறிவிப்புகளில்
• 'இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும்' என்றும்,
• 'இருவரின் சாட்சி ' என்றும்,
• அதன் பிறகு 'நீதமான இரு சாட்சிகள்' என்றும்,
கருத்துக்களில் வார்த்தைகளை மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். ஒரு அறிவிப்பில் இரண்டு முஸ்லிம்களின் சாட்சி வேண்டும் என பதியப்பட்டுள்ளது. அதே நபர் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் இருவரின் சாட்சி இருந்தாலே போதுமானது என பதியப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் அல்லாதவர்களின் சாட்சியை ஏற்றுக்கொள்ளலாம் என இரண்டாவது அறிவிப்பு கூறுகின்றது என நாம் விளங்கிக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுவது நியாயம்தான். மேலும் அதே நபர் அறிவிக்கும் அடுத்த அறிவிப்பில் நீதமான இரு சாட்சிகள் என கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் கணிசமானோர் நீதமாக இல்லாமல் இருக்கும் போது நீதமான பிற மதத்தவர்கள் கூறும் சாட்சியை ஏற்றுக் கொள்ளலாம் என்று இந்த அறிவிப்பு கூறுகின்றதா? இந்த அறிவிப்பை பலமானது என்று கூறுவோர்தான் இவை போன்ற கேள்விகளுக்கு பதில் தர கடமைப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெரும் ஹஜ்ஜாஜ் பலவீனமானவர் ஆவார்.
قال الذهبي في الكاشف : أحد الأعلام ، على لين فيه ... قال أحمد : كان من حفاظ الحديث ... وقال أبو حاتم : صدوق يدلس ، فإذا قال حدثنا فهو صالح ...
قال أبو حاتم : صدوق ، يدلس عن الضعفاء يكتب حديثه ، فإذا قال : حدثنا ، فهو صالح لا يرتاب فى صدقه و حفظه إذا بين السماع ، لا يحتج بحديثه
قال إبن حجر في التقريب : صدوق كثير الخطأ و التدليس ، أحد الفقهاء
قال أبو زرعة : صدوق يدلس
قال يحي بن معين : قال أبو بكر بن أبى خيثمة ، عن يحيى بن معين : صدوق ، ليس بالقوى ، يدلس عن محمد بن عبيد الله العرزمى ، عن عمرو بن شعيب
قال عبد الله بن المبارك : كان الحجاج يدلس
قال النسائي : ليس بالقوي
قال يعقوب بن شيبة : واهى الحديث ، فى حديثه اضطراب كثير ، و هو صدوق ، و كان أحد الفقهاء
காஷிப் என்ற கிரந்தத்தில் மேற்கண்ட ஹஜ்ஜாஜ் என்பவரைப்பற்றி அறிஞர்கள் கூறுவதாக இமாம் தஹபி அவர்கள் கூறும்போது, இவர் அறிஞர்களில் ஒருவராவார். அவர் மீது சில பலவீனங்கள் உள்ளன. இமாம் அஹமது அவர்கள் கூறும் போது இவர் ஹதீஸ் மனனம் செய்தவர்களில் இருந்தார் மேலும் அபூஹாதிம் அவர்கள் இவரை ஒப்புக்கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர் என்ற கூறியுள்ளார்கள்.
அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஃதனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர்.
யாகூப் பின் ஷைபா அவர்கள் ஹஜ்ஜாஜைப் பற்றிக் கூறும்போது ஹதீஸில் பொய்யுரைப்பவர், அவரின் ஹதீஸில் அதிகமான முரண்பாடுகள் இருக்கும், அவர் ஒப்புக்கொள்ளப்பட்டவர், அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்கின்றனர்.
இமாம் நஸாயீ (ரஹ்) அவர்கள் இவரை பலமில்லாதவர் எனக் கூறியுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கூறும்போது: ஹஜ்ஜாஜ் அவர்கள் இருட்டடிப்பு செய்பவர்களில் ஒருவராக இருந்தார் என்று விமர்சித்துள்ளார்கள்.
யஹ்யா பின் முயீன் (ரஹ்) அவர்கள் கூறும்போது : ஒப்புக்கொள்ளப்பட்டவர், பலமில்லாதவர், அவர் முகமது பின் உபைதுல்லாஹ் விடமிருந்து அமர் பின் ஷூயைப்பிடமிருந்தும் இருட்டடிப்பு செய்பவர் என்று விமர்சித்துள்ளார்கள்.
அபூஹாதிம் அல் ராஸி (ரஹ்) கூறுகின்றார்கள் : ஒப்புக்கொள்ளப்பட்டவர், இவர் பலவீனமான நபர்களிடமிருந்து இருட்டடிப்பு செய்து அறிவிப்பவர். அவர் நம்மிடம் அறிவித்தார் (ஹத்தஸனா) எனக்கூறினால் அதை ஏற்றுக்கொள்ளலாம் அதை எழுதியும் கொள்ளலாம். அந்த செய்தி உண்மையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் செவியுற்று தெளிவு பெற்றாலே தவிர. இல்லையெனில் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது.
தக்ரீபில் இப்னு ஹஜர் (ரஹ்) கூறும்போது, அதிகத் தவறு செய்யக் கூடியவர் இருட்டடிப்பு செய்பவர், அறிஞர்களில் ஒருவர்.
அபூ சுர்ஆ கூறும் போது: ஒப்புக் கொள்ளப்பட்டவர், இருட்டடிப்பு செய்பவர்
• மேற்காணும் அறிவிப்புகளில் ஹஜ்ஜாஜ் என்ற அந்த அறிவிப்பாளர் ' حدثنا - ஹத்தஸனா' என அறிவிக்காமல் ' عن- அன்' என்ற பதத்தை கொண்டே அறிவித்துள்ளார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
• இன்னும் இந்த செய்தியை அறிவிக்கும் ஹூசைன் பின் அல்ஹாரிஸ் அல் ஜத்லீ அவர்கள்கூட நம்பகமானவர் என்பதற்கு உறுதியான சான்றுகள் ஏதுமில்லை. ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரை நல்லவராக இருக்கலாம் என்ற சந்தேக வார்த்தையை கொண்டே குறிப்பிடப்படுகின்றார்.
பிறை பார்த்த தகவலை இரண்டு சாட்சிகள் வந்து சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுதான் மார்க்கம் என்று கூறுபவர்களின் ஆதாரங்களின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக உள்ளதை நீங்களே காணுங்கள். இந்நிலையில் நஸாயி கிரந்தத்தின் 2395-வது இடம்பெறும் மேற்காணும் அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் இடம்பெறவில்லை எனவே இது பலம் வாய்ந்த நபிமொழி என சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். எனவே நஸாயி (2395)-வது அறிவிப்பு பற்றிய கூடுதலான தகவல்களையும் பார்ப்போம்.
1. நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஒரு நபித்தோழர் அறிவித்தால்தான் அதை நபிமொழி என்போம். நஸாஈயின் மேற்படி அறிவிப்பு ஸஹீஹான ஹதீஸ்தான் என்றால் இதை அறிவித்த ஸஹாபி யார்? அந்நபித்தோழரின் பெயர் என்ன? முதலில் இதற்கு விடை கூற வேண்டும். இதற்கு விடைகூற முடியாதவர்களுக்கு இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள குழறுபடிகளையும், முரண்பாடுகளையும், பலவீனங்களையும் பட்டியலிட்டு என்ன பயனும் இருக்கப் போவதில்லை? முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்களே அதுபோல இந்த முதல் கேள்வியிலேயே நஸாஈயின் (2395)-வது அறிவிப்பு பலவீனம் என்று அடிபட்டு விடுகிறது. இரண்டு கால்களும் இல்லாத ஒருவர், தான் எந்த கம்பெனியின் செருப்பை அணியவேண்டும் என்ற ஆய்வில் இறங்குவது அறிவுடமையாகாது. எனவே அறிவித்த ஸஹாபி யார்? அவருடைய பெயர் என்ன? என்ற இக்கேள்விக்கு பதிலளிக்கப்படாமல் இதை ஸஹீஹான ஹதீஸ் என்று வாதம் வைப்பது அறிவுடமையாகாது.
2. இந்த அறிவிப்பில், ஹஸன் பின் ஹாரிஸ் அல் ஜத்லீ இடமிருந்து ஹஜ்ஜாஜ் என்ற பலவீனமான அறிவிப்பாளர் அறிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக இப்னு அபீ ஜாயிதா என்பவர் இடம்பெறுகிறார் என்று நினைக்கலாம். இப்படி வாதம் வைக்க இருப்பவர்களுக்கு பதிலாக ஹதீஸ் கலை நூலான தஹ்தீபுல் கமாலில் இடம்பெறும் இக்குறிப்பை முதலில் தருகிறோம்.
تهذيب الكمال - (17 / 122)
رَوَاهُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَعْقُوبَ الْجَوْزَجَانِيِّ، عَنْ سعيد بْن شبيب الحضرمي، عَنْ يحيى بْن زكريا بْن أَبِي زائدة، عَنْ حسين بْن الحارث الجدلي، ولم يذكر حجاج بْن أرطاة فِي إسناده، والصواب ذكره، كما فِي روايتنا هذه، وقد رواه يَزِيد بْن هارون، أيضا عَنْ حجاج بْن أرطاة *
ஹூஸைன் பின் அல்ஹாரிஸில் ஜத்லீ வாயிலாக இடம் பெறும் இந்த அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் பின் அர்த்தா இடம்பெறவில்லை. சரியான அறிவிப்பு ஹஜ்ஜாஜ் பின் அர்த்தா இடம் பெறுவதே ஆகும்.
தாரகுத்னி நஸாயில் இடம் பெறும் அறிவிப்பாளர் பட்டியலில் ஹூஸைன் பின் ஹாரிஸுக்கு பிறகு தாரகுத்னியின் ஹதீஸில் இடம் பெறும் ஹஜ்ஜாஜ் இப்னு அர்த்தா மரணம் அடைந்த காலம் ஹிஜ்ரி 145. நஸாயியில் இடம் பெறும் இப்னு ஸாயிதா ஹிஜ்ரி 183ல் மரணம் அடைந்தார் ஆக நஸாஈயில் இடம்பெறும் ஹதீஸில் ஹஜ்ஜாஜ் நடுவில் இடம் பெறவில்லை.
அதாவது நஸாஈயில் இடம்பெறும் (2395)-வது அறிவிப்பிலும் ஹஜ்ஜாஜ் இடம்பெற வேண்டும். அவர் பெயரை தவறுதலாக குறிப்பிடவில்லை என்று தஹ்தீபுல் கமால் தெளிவாகக் கூறுகிறது. நஸாஈயில் இடம்பெறும் (2395)-வது அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் விடுபட்டுள்ளார் என்பதுதான் தெளிவு.
அஹமத் (18510), தாரகுத்னீ (1920), மஹாரிபத்து ஸஹாபா (6626) போன்றவற்றில் இடம்பெறும் அறிவிப்புகளிலாவது ஹஜ்ஜாஜ் என்ற பலவீனமானவர் இடம்பெற்று அறிவிப்பாளர் வரிசை தாபியி வரை உடையாமல் சென்று முற்றுப் பெற்றது. ஆனால் நஸாஈயின் அறிவிப்பாளர் வரிசையிலோ ஹஜ்ஜாஜ் விடுபட்டு உள்ளதால் முழுமை பெறாத அறிவிப்பாளர் வரிசையாக அமைந்து விட்டது. எனவே ஹஜ்ஜாஜ் விடுபட்டுள்ளதால் கூடுதல் பலவீனமாக இந்த ரிவாயத் அமையுமே அல்லாமல் இது ஸஹீஹ் என்ற வாடையைக் கூட இந்த அறிவிப்பு நுகர முடியாது.
3. மேற்படி நஸாஈயின் அறிவிப்பில் '' وانسكوا لها'' என்ற ஒரு சொல் இடம்பெறுகிறது. இது அரபுச் சொல்தானா? அப்படி என்றால் இதன் பொருள் என்ன?.
4. நஸாஈயின் அறிவிப்பில் இடம்பெறும் '' وانسكوا لها'' என்ற இந்தச் சொல்
அஹ்மதில் '' وأنسكوا لها'' என்றும்,
தாரகுத்னீயில் ''وأنسكوا'' என்றும்,
மஹாரிபத்து ஸஹாபாவில் '' وأمسكوا لها''
இடம்பெற்றுள்ளனவே ஏன் இந்த முரண்பாடு? இதில் எந்தச் சொல்லை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இவற்றின் பொருள் என்ன?
5. இல்லை இது அரபுச் சொல்லே இல்லை. ஹதீஸை எழுதியவர்கள் தவறாக எழுதியிருக்கலாம் என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால், தப்பும் தவறுமாக எழுதப்பட்ட ஒன்றை ஹதீஸ் என்று நீங்கள் ஏன் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?
இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத, பலவீனமான அறிவிப்பாளர்கள் வரிசை கொண்ட, குழப்பமான வார்த்தைகளை உள்ளடக்கிய மேற்கண்ட இந்த அறிவிப்பு எப்படி நபிமொழியாக அமையும்? என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்கள் அறிவித்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறி, அவ்வாறு அறிவித்த நபித்தோழர்கள் யார் யார்? என்று அடையாளம் காட்டாமல் வந்துள்ள இந்த அறிவிப்பு 'ஷாஹிதானி' என்ற இரண்டு சாட்சிகளின் விஷயத்திற்கோ, பிறை பார்த்தலுக்கோ, பிறை பார்த்த தகவல்களுக்கோ ஒரு போதும் ஆதாரமாக அமையாது.
மாற்றுக் கருத்துடையோரின் நிலைப்பாட்டின்படி தத்தமது பகுதியில் அல்லது சர்வதேச நாடுகளில், ஒரு மாதத்தின் 30-ஆம் நாளுக்குரிய பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் (மாற்றுக் கருத்தினரின் கூற்றுப்படி 29-வது நாளின் பின்னேரம் 30-வது நாளின் இரவில்) புறக்கண்ணால் பார்க்க வேண்டும். அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டும், அல்லது முப்பது நாட்களாக முழுமை செய்து அந்த மாதத்தை முடிக்க வேண்டும். இதுதான் அவர்களின் பிறை நிலைப்பாடு.
ஒரு மாதத்தின் இறுதி வாரத்தில் தென்படும் பிறைகள் தேய்பிறைகள் (றுயniபெ ஊசநளஉநவெள) எனப்படும். மேற்படி தேய்பிறைகள் மஃரிபு நேரத்தில் தெரியாது. பிறையை 29-ஆம் நாளில் மஃரிபு நேரத்தில் மேற்குத் திசையில் பார்க்கலாம் என்று இவர்கள் நம்பியுள்ளதே இவர்களுக்கு சந்திரன் எந்த திசையில் உதிக்கிறது எந்த திசையில் மறைகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
நடப்பு மாதத்தின் 30-ஆம் நாளையோ, அல்லது புதிய மாதத்தின் முதல் நாளையோ தீர்மானிப்பதற்கு பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டுமாம். அல்லது அவ்வாறு பார்த்தவர்களின் சாட்சியைப் பெறவேண்டுமாம். இதுதான் இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை என்பதற்கு இதுவரை ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியையோ மாற்றுக் கருத்துடையோரால் சமர்ப்பிக்க இயலவில்லையே அது ஏன்? சிந்திக்கக் கூடாதா?.
ஒரு மாதத்தின் 30-ஆம் நாளை தீர்மானிப்பதற்கு பிறையை 29-ஆம் நாளின் மஃரிபு வேளையிலும், 29-ஆம் நாளுக்குரிய பிறையை 28-ஆம் நாளிலும் புறக்கண்ணால் பார்க்கவேண்டும் என்றால் அந்த மாதத்தின் முதல்நாளுக்குரிய பிறையை எந்த நாளில் பார்க்க வேண்டும்? அவர்கள் கூற்றுப்படி 29 நாளின் பின்னேரம் 30 நாளின் இரவு என்பதற்கு எந்த மார்க்க ஆதாரமும் இல்லை.
தேய்பிறைகள் மஃரிபு வேளையிலோ, மேற்குத்திசையிலோ காட்சியளிப்பதில்லை மாறாக அவை ஃபஜ்ரு நேரத்தில், கிழக்குத் திசையில்தான் காட்சியளிக்கும். பிறைகள் குறித்து இந்த சாதாரண அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக 29-ஆம் நாளின் மஃரிபு வேளையில் பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குக் கட்டளை இட்டிருப்பார்களா? மக்களே சற்று சிந்தியுங்கள்.