இ)ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறை செய்தி :



حدثنا مسدد ، وخلف بن هشام المقرئ ، قالا : حدثنا أبو عوانة ، عن منصور ، عن ربعي بن حراش ، عن رجل ، من أصحاب النبي صلى الله عليه وسلم قال : اختلف الناس في آخر يوم من رمضان ، فقدم أعرابيان ، فشهدا عند النبي صلى الله عليه وسلم بالله لأهلا الهلال أمس عشية ، " فأمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يفطروا " . )سنن أبي داود - كتاب الصوم باب شهادة رجلين على رؤية هلال شوال - حديث : ‏2005‏(.

ரமழானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து, நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர் என்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர் அறிவித்தவர்: ரிப்யீ பின் ஹிராஷ், நூல்: அபூதாவூத் 2005.

حدثنا أبو بكر النيسابوري , ثنا الحسن بن محمد بن الصباح , ثنا عبيدة بن حميد , عن منصور , عن ربعي , عن رجل , من أصحاب النبي صلى الله عليه وسلم , أن النبي صلى الله عليه وسلم أصبح صائما لتمام الثلاثين من رمضان , فجاء أعرابيان فشهدا أن لا إله إلا الله وإنهما أهلاه بالأمس , فأمرهم " فأفطروا " . (سنن الدارقطني - كتاب الصيام باب الشهادة على رؤية الهلال - حديث : ‏1921‏).

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் முப்பதாம் நாளில் நோன்பு நோற்றவர்களாக சுப்ஹூ வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர். எனவே அவர்கள் அவர்களை நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள். அறிவித்தவர்: ரிப்யீ, நூல்: தாரகுத்னீ

மேற்படி அறிவிப்பை வைத்துக்கொண்டு அந்த இரண்டு கிராமவாசிகள் பிறையை பார்த்துவிட்டுத்தானே நபி (ஸல்) அவர்களிடம் அறிவிக்கின்றார்கள் என்று வாதம் வைக்கின்றார்கள். முதலில் ரிப்யீ பின் ஹிராஷ் என்ற தாபிஈயீ அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

மேற்காணும் அபூதாவூது 2005-வது அறிவிப்பில் இடம்பெறும் 'அஷிய்யா' என்ற அரபுப் பதம் இரவு உணவு சாப்பிடும் நேரத்தைக் குறிப்பதாகும். மேலும் அங்கே கிராமவாசிகள் பிறை பார்த்ததாக எந்த நேரடி வாசகமும் இல்லை. இன்னும் பிறை பற்றி 'அஷிய்யா' நேரத்தில் மக்கள் சப்தமிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறியதாகவே செய்தி இடம்பெறுகிறது. மேலும் தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பிலும் யாரும் பிறை பார்த்ததாக நேரடி வாசகம் எதுவும் இல்லை.

மேற்கண்ட இரு அறிவிப்புகளின் இடம் பெற்றுள்ள 'நேற்று இஷா நேரப் பிறையால் சப்தமிட்டனர்', 'சாட்சி கூறி நேற்று அவர்கள் அதற்காக சப்தமிட்டனர்' போன்ற வாசகங்களை நேரடியாக மொழிபெயர்த்தால் நகைப்புகுரியதாகவே அமையும். இந்நிலையில் மேற்கண்ட இரு அறிவிப்புகளுமே 'முர்ஸல்' அறிவிப்புகள் ஆகும். இந்த அறிவிப்புகளை ஆதாரமாக ஏற்றுக்கொள்பவர்கள் 'முர்ஸல்' அறிவிப்புகள் மார்க்க ஆதாரமாகாது என்பதை வசதியாக மறந்தது ஏன்? என்று கேட்கிறோம்.

முர்ஸல் என்றால் இடையில் விடுபட்;டது என்பது இதன் சொற்பொருளாகும். அதாவது அர்ஸல் என்ற இறந்த கால வினைச் சொல்லிலிருந்து வந்த இஸ்மு மஃப்ஊல் வடிவமே முர்ஸல் என்பதாகும். இதன் பொருள் பொதுவாக விட்டுவிட்டான் என்பதுதாகும்.

ஏனெனில் முர்ஸல் வகை நபிமொழியில் அறிமுகமான அறிவிப்பாளரை குறிப்பிடாமல் அறிவிப்பாளர் தொடர் விடப்பட்டு விடுகிறது. ஏற்றுக் கொள்ளத்தக்க நபிமொழிக்கான நிபந்தனைகளில் ஒன்றான 'அறுபடாத' அறிவிப்பாளர் தொடர்ச்சியை இழந்த காரணத்தினாலும், விடுபட்ட அறிவிப்பாளரின் விவரம் தெரியாததாலும் அவ்வாறு விடுபட்டவர் நபித்தோழர் அல்லாதவராக இருக்கலாம் என்ற காரணத்தாலும் இந்த முர்ஸல் வகை நபிமொழி ஏற்றுக் கொள்ளப்படாத பலவீனமான நபிமொழியாகும் என்று தைஸீரு முஸ்தலஹுல் ஹதீத் போன்ற ஹதீஸ்கலை நூல்களில் நாம் காணமுடிகிறது.

ஒரு செய்தி நபி (ஸல்) அவர்களிடம் இருந்து பெறப்பட்டதா? என்பதை அறிவதுதான் ஹதீஸ் கலையின் முக்கிய விதியாகும். அறிவிப்பாளர்களின் தொடர் எத்தகைய சந்தேகங்களுக்கும், பலவீனங்களுக்கும் அப்பாற்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை சீராகச் சென்று முடிந்தால்தான் அந்தச் செய்தி ஹதீஸ் என்ற தரத்தை அடையும். அதுவரை அந்த செய்தியை ஹதீஸாக ஏற்க முடியாது.

ஒரு செய்தி நபி (ஸல்) அவர்கள் வரை செல்லாமல் நபித்தோழர்கள் காலத்திற்கு பின்னால் வாழ்ந்த ஒரு தாபிஈ ஒருவரால் பொத்தாம் பொதுவாக நான் ஒரு ஸஹாபியிடம் கேட்டேன் என்று மறைத்து அறிவித்தால் அது எவ்வகையிலும் ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது. எல்லா விதிகளும் சரியாக இருக்கும் ஒரு செய்தியைத்தான் ஸஹீஹ் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் கூறப்படும்.

மேற்கண்ட செய்திகள் எவ்வகையிலும் மர்ஃபூவு தரத்தை அடையவே முடியாது என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்நிலையில் முர்ஸலான அறிவிப்புகள் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும் நிலையில் மேற்கண்ட அறிவிப்புகளுக்கு மட்டும் அது விதிவிலக்காகி விட்டதா? என்று இவற்றை ஆதாரமாகக் கருதுபவர்களிடம் நாம் மீண்டும் கேட்க விரும்புகிறோம்.

எனவே தாரகுத்னீயில் இடம்பெறும் 1921-வது அறிவிப்பும், அபூதாவூது 2005-வது அறிவிப்பும் எந்த நபித்தோழர் இதை அறிவித்தார்கள் என்ற தகவல் காணப்படாத பலவீனமான அறிவிப்புகளாகிவிட்ட நிலையில் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு அவை எக்காலமும் ஆதாரமாகாது என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். இன்னும் தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறை பார்த்த தகவல் போன்ற பிறை நிலைப்பாடுகளுக்கு வாகனக்கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? என்ற நமது ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்ட புத்தகத்தை நீங்கள் படித்தால் முர்ஸலான அறிவிப்புகள் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.

அறிவிப்பாளர் விடுபட்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று நாம் பிரச்சாரம் செய்து வந்ததின் விளைவாக கஷ்டப்பட்டு, மெல்லவும் இயலாமல், விழுங்கவும் முடியாமல் கீழ்க்கண்ட ஒரு அறிவிப்பை எடுத்துள்ளனர். இதோ விடுபட்ட நபித்தோழர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், இதுவே எங்களுடைய ஆதாரம் என்று சிலர் முழங்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய அந்த ஆதாரத்தையும் நாம் இப்போது அலசுவோம்.